Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி: மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்பு!

நெல்லையில், அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் பந்தயம் நடந்தது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சைக்கிள் போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நெல்லைப் பிரிவின் சார்பாக, அண்ணா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கில், விரைவு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. ஆடவர் மற்றும் மகளிருக்காக இந்தப் போட்டிகள் தனித்தனியே நடைபெற்றன. 13 வயது, 15 வயது, 17 வயது பிரிவினருக்காக நடந்த இந்தப் போட்டிகளை, நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். 

ஆடவருக்கான போட்டி, 15 மற்றும் 20 கி.மீ தூரத்துக்கு நடந்தது. மகளிருக்கான போட்டி, 10 மற்றும் 15 கி.மீ தூரத்துக்கு நடத்தப்பட்டது. அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்தப் போட்டி, மாநகராட்சி ஆணையாளர் பங்களா, டி.ஐ.ஜி பங்களா, திருச்செந்தூர் சாலை, வி.எம்.சத்திரம், புவி ஈர்ப்பு மையம் வழியாக திருச்செந்தூர் சாலையில் சென்று, மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வந்து சேரும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.. 

இந்தப் போட்டியில், முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்குப் பதக்கம் வழங்கப்பட்டது. முதல் 10 இடங்களைக் கைப்பற்றிய வீரர், வீராங்கனைகள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வீரபத்ரன், விளையாட்டுப் பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டு விடுதி மாணவர்கள் கலந்துகொண்டனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close