Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“விவாகரத்து வழக்குக்கு ஆறு மாச அவகாசம் தவிர்த்தது நல்லதா?” அருள்மொழியின் பதில்

ந்து திருமணச் சட்டத்தின்படி (1955), மனமொத்துப் பிரிய விரும்பி விவாகரத்துக் கோரும் தம்பதிகளுக்கு, ஆறு மாதம் அளிக்க வேண்டும் என்கிறது நம் சட்டம். இந்த நிலையில், விவாகரத்துக் கோரி தம்பதிகள் தொடுத்த வழக்கு ஒன்று, நீதிபதிகள் ஏ.கே.கோயல் மற்றும் யூ.யூ.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அதில், 'கடந்த எட்டு ஆண்டுகளாக தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும், இனி சேர்ந்து வாழச் சாத்தியம் இல்லை. அதனால், விவாகரத்தை விரைந்து வழங்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தம்பதிகள் இருவரும் மனமொத்து விவாகரத்து கோரும் நிலையில், ஆறு மாத கால அவகாசம் என்பது கட்டாயமில்லை. இரு தரப்பும் விவாகரத்து கோரி மனு செய்து, ஒரு வார காலத்துக்குப் பின்னர், கால அவகாசத்தைக் குறைக்கக் கோரி தனியே மனு செய்தால், அதை நீதிமன்றம் பரிசீலிக்கலாம். சூழல் மற்றும் உண்மைகளைக் கருத்தில்கொண்டு கால அவகாசத்தைக் குறைப்பது குறித்து விசாரணை நீதிமன்றங்கள் முடிவெடுக்கலாம்' என்று கருத்துத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் அருள்மொழியிடம் பேசினோம். 

விவாகரத்து

''அடிப்படையில் இந்து திருமணச் சட்டம், கிறிஸ்துவ திருமணச் சட்டம் இரண்டிலும் கணவன், மனைவி சேர்ந்து மணமொத்து விவாகரத்துக்கு மனுத்தாக்கல் செய்ததும், ஓர் எண் கொடுக்கப்படும். அந்த வழக்கு, ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் விசாரிக்கப்படும். இதுதான் இரண்டு சட்டங்களிலும் உள்ள நடைமுறை. மனமொத்து விவாகரத்துக்குத் தாக்கல் செய்ய, அந்தக் கணவனும் மனைவியும் ஓராண்டு பிரிந்து இருக்கணும். அப்படிப் பிரிந்திருந்துதான் வழக்கையே தாக்கல் செய்ய முடியும். திருமணமாகி இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆறு மாதங்களாக கருத்து வேறுபாடு இருக்கு. அதனால், நாங்க பிரிய நினைக்கிறோம் என்கிறவர்களும், 'நாங்க ஒரு வருஷமா பிரிஞ்சுதான் இருக்கோம்'னு விவாகரத்து மனுத்தாக்கல் செய்வாங்க. அப்படி அவசரமாகப் பிரிய நினைக்கிறவங்களும் அந்த வழக்கு தாக்கல் செய்ததுக்குப் பிறகு ஆறு மாதங்கள் காத்திருந்துதான் ஆகணும்னு சட்டம் சொல்லுது. இது பலருக்குக் கஷ்டம்தான். 

அருள்மொழிசில வழக்குகளில் அவங்க ஏற்கெனவே ரொம்ப மோசமா சண்டைப் போட்டுட்டு இருப்பாங்க. பிரிஞ்சா போதும் என்கிற எண்ணத்தில் இருப்பாங்க. அவங்க வழக்கும் நிலுவையில் இருக்கும். 'எங்க வழக்கு ஒரு வருஷமா நிலுவையில்தானே இருக்கு. அப்போ நாங்க ஒரு வருஷமா பிரிஞ்சி இருக்கிறதா கருதி, உடனே விவாகரத்து கொடுத்துருங்க'னு மனுத்தாக்கல் செய்வாங்க. அதைக் குடும்ப நீதிமன்றங்களும் ஏற்று உடனே விவாகரத்து கொடுப்பாங்க. இதுதான் 2008-ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்துச்சு.

இந்து, கிறிஸ்தவ திருமணச் சட்டத்திலும் இதுக்கு இடம் இருக்கு. ஆனால், 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி, சிர் புர்கர் தலைமையிலான அமர்வு ஒரு வழக்கை விசாரிச்சது. 'இந்த ஆறு மாத கால அவகாசம் சட்டத்தில் உள்ள ஒன்று. அதைக் குறைப்பதற்கு நீதிமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை' எனத் தீர்ப்பு கொடுத்துச்சு. இந்தத் தீர்ப்பு வந்த பிறகுதான், நீதிமன்றங்கள் மணமொத்து விவகாரத்து செய்பவர்கள், கண்டிப்பாக ஆறு மாதங்கள் காத்திருக்கணும் என்கிற வழக்கத்தை கடைபிடிச்சாங்க. வழக்கு எத்தனை வருடங்கள் நிலுவையில் இருந்தாலும், விசாரணைக்கு வந்தது முதல் ஆறு மாத காலம் காத்திருக்கணும் என உத்தரவு பிறப்பிச்சாங்க. 

இப்படிப் பிறப்பிக்கப்படும் உத்தரவில், கணவர் வாழ்க்கைப் பொருளுதவி கொடுக்கணும்னா, அந்தப் பணத்தில் ஒரு பாதியை ஆறு மாசத்துக்குப் பிறகும், மற்றொரு பாதியை மனுத்தாக்கல் செய்யும்போதும் கொடுப்பாங்க. இந்தச் சூழலில், 'ஆறு மாதங்களுக்குப் பிறகு கணவர் வரவில்லை எனில், வழக்கே போய்விடுமே' என்று மனைவி பயப்படுவாங்க. 'ஆறு மாசங்களுக்கு அப்புறம் மனைவி வரலைன்னா கொடுத்த பாதி பணம் வீணாகிடுமே'னு கணவர் பயப்படுவார். இப்படி ஒருத்தரை ஒருத்தர் நம்பாமல் சண்டை போடுவாங்க. அந்த ஆறு மாதங்களுக்குள்ளே அவங்க இரண்டுப் பேரும் அதிகமான சிக்கல்களை எதிர்கொள்வாங்க. இந்த மாதிரி சிக்கலை எதிர்கொண்ட ஒரு தம்பதிதான், 'நாங்க இன்னும் ஆறு மாத காலம் காத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை. எங்களுக்கு உடனே விவாகரத்து கொடுத்துருங்க' எனக் கிளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செந்திருக்காங்க. 

இந்த வழக்கை விசாரிச்சுட்டு, 'இந்த வழக்குக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதிச்சிருக்கு. அதை மீறி எதுவும் பண்ண முடியாது'னு கிளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிடுச்சு. அதற்குப் பின்னர்தான் உச்ச நீதிமன்றத்தில் அதை எதிர்த்து இந்தத் தம்பதிகள் வழக்கு தொடர்ந்திருக்காங்க. ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகள் ஏராளமாக வந்துள்ளதால், 'வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது அந்தந்த வழக்குகளின் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டோ ஒரு வாரத்துக்குப் பிறகு, அந்த வழக்கைச் சரியா எனப் பரிசீலனை செய்து அவர்களுக்கு விவாகரத்து வழங்கலாம்' எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தப் பரிசீலனை செய்கிற உரிமை எந்த நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடைபெறுகிறதோ, அந்த நீதிமன்றங்களுக்கு மட்டும்தான் உள்ளது. அதேபோன்று நீதிபதி இவர்களுக்கு கவுன்சலிங் தேவைப்படுகிறது என நினைத்தால், அவர் ஆறு மாத கால அவகாசம் வழங்கவும் வாய்ப்புள்ளது. நீதிமன்றங்களின் பரிசீலனைக்குத் திருப்தியா இருந்தால், நிச்சயம் உடனே விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தீர்ப்பு விவாகரத்து வழக்கு போடுறவங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலையும் தேவையில்லாத வழக்கு எண்ணிக்கையையும் குறைக்கும்.'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement