விக்ரம் அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் இவர்தான்!

விஜய் சந்தர் இயக்கத்தில், `ஸ்கெட்ச்', கௌதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்' போன்ற படங்களில் நடித்துவருகிறார், விக்ரம் இந்தப் படங்களைத் தொடர்ந்து, விக்ரம் அடுத்து நடிக்கவிருப்பது, ராம் இயக்கத்தில். 

விக்ரம்

`கற்றது தமிழ்', `தங்க மீன்கள்', `தரமணி' படங்கள்மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர், இயக்குநர் ராம். இவர், அடுத்ததாக மம்மூட்டி, அஞ்சலி நடிப்பில், `பேரன்பு' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, ராம் இயக்கவிருக்கும் அடுத்த படத்தைத் தயாரிக்கிறார், தாணு. `காசி', `பிதாமகன்', `அந்நியன்', `தெய்வத்திருமகள்' எனப் பல படங்களில் மிகச் சவாலான  கதாபாத்திரங்களில் நடித்தவர், விக்ரம். இயக்குநர் ராமும் தனது படங்களில் நடிக்கும் முதன்மைக் கதாபாத்திரங்களின் நடிப்பை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான இடம் கொடுப்பவர். மாறுபட்ட கதைக்களங்களில் படம் இயக்கும் ராமும், விதவிதமான கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்திருப்பதால், நிச்சயம் சினிமா ரசிகர்களுக்குத் திருப்திகரமான படமாக இது இருக்கும் என நம்பலாம். மேலும்,பெரிய பொருட்செலவில் படங்களைத் தயாரித்துவரும் தாணு, இந்தப் படத்தைத் தயாரிப்பதும் கூடுதல் சிறப்பான விஷயம். இந்த வித்தியாசமான கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!