Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பணம் இருந்தால் ரிசார்ட்டும் சிறைச்சாலையாகும், சிறைச்சாலையும் ரிசார்ட்டாகும்' - ஹெச்.ராஜா

“மாற்று அரசு வேண்டும் என்றால் காங்கிரஸில் பிளவு தேவை. அப்படி ஏற்பட்டால் அதற்குக் காரணம் பா.ஜ.க இல்லை” என்று ஹெச்.ராஜா புதுச்சேரியில் தெரிவித்திருக்கிறார்.

ஹெச்.ராஜா

புதுச்சேரியில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவுக்கு வந்திருந்த பா.ஜ.க-வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ''உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ’நீட்’ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு முறைகேடாகச் சேர்க்கப்பட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களை உடனே வெளியேற்ற இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய அளவில் புதுச்சேரி அரசு ஊழல் புரிந்துள்ளது தெரிகிறது.

யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. அதை உணர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி  ஆளுநருடன் இணக்கமாக செயல்பட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ’நீட்’ தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தும் அதைக் கடைப்பிடிக்காததால் மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. ஊழல் அரசு நடைபெறுவதால்தான் இது போன்ற ஊழல் நிகழ்ந்து உள்ளது. மாணவர்கள் நலனில் புதுச்சேரி அரசுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தாமல் ஆளுநருடன் தொடர்ந்து மோதல் போக்குடன் செயல்படுவதால்தான் மாநிலத்தில் நிர்வாகச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிதான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு பாதுகாப்பு கொடுத்து தங்க வைத்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைக்கத்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு காங்கிரஸ் அரசுகள் ஆதரவளிக்கின்றன. பணம் இருந்தால் ரிசார்ட்டும் சிறைச்சாலையாகும், சிறைச்சாலையும் ரிசார்ட்டாகும். தமிழகத்தில் நடைபெறும் உட்கட்சி பூசலைப் பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் ஆசிரியர் போராட்டங்களை தமிழகத்தில் தூண்டிவிடுகின்றன. மன்னார்குடி கும்பலை அ.தி.மு.க கட்சித் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். வரும் 20-ம் தேதி அதற்கான முடிவு வரும் என எதிர் பார்க்கின்றேன். தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் போராட்டம் குறித்து நீதிபதி கருத்தை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் உட்கட்சி பிரச்னைகள் வைத்து ஆசிரியர்கள் போராட்டம் நடைபெறுவதாக நான் கருதுகிறேன். தினகரனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நோக்கில் இருக்கின்றார். அ.தி.மு.க-வின் எந்த ஒரு செயலிலும் பா.ஜ.க இல்லை. சசிகலாவின் அதீத அதிகாரப் பசியின் காரணமாகத்தான் அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவராக சசிகலா திகழ்கிறார். கமலஹாசன் அரசியல் கட்சி துவங்குவதற்கு வாழ்த்துகள். மாற்று அரசு வேண்டும் என்றால் காங்கிரஸில் பிளவு தேவை. அப்படி ஏற்பட்டால் அதற்கு காரணம் பா.ஜ.க இல்லை” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close