Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

போராட்டத்தில் குதித்த வி.ஏ.ஓ-க்கள் - திணறிய போலீஸ்

தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கமும் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு (சி.பி.எஸ்) எதிராகப் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்கள். இதனால், சேலம் காவல்துறையினர் இவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் சேலம் பழைய நாட்டாண்மைக் கழக கட்டடத்தில் தற்காலிகச் சாமியானா பந்தல் அமைத்து காத்திருப்புப் போராட்டம் செய்துவந்தார்கள். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்கு காலை, மதிய உணவுகள் அவர்களே தயார் செய்து கொடுத்து அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்கள். நேற்று இரவு மாநகர காவல்துறை மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தனிடம் இந்த இடத்தில் நீங்கள் காத்திருப்புப் போராட்டம் செய்ய நாளையிலிருந்து அனுமதி இல்லை. மீறி இந்த இடத்தில் இருந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றதை அடுத்து நேற்று இரவு அனைத்து ஆசிரியர்களும் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். இன்று காலை அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே கூடினார்கள். காத்திருப்புப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததை அடுத்து  சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள்.

இந்தச் சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இதனால் சேலம் மாநகரப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கபட்டது. சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும் போலீஸாருகும் வாக்குவாதம் அதிகரித்தது. பிறகு போலீஸார் ஆசிரியர்களைக் குண்டு கட்டாகத் தூக்கு வாகனத்தில் ஏற்றினார்கள்.

இதுபற்றி ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட நிர்வாகி சண்முகவடிவு, ''நாங்கள் நேற்று வரை அமைதியான முறையில் நாட்டாண்மை கழக கட்டிடத்தில் காத்திருப்பு போராட்டம் செய்து வந்தோம். அங்கு அனுமதி இல்லை என்று கேட்டை பூட்டு போட்டு விட்டதால் சாலையில் அமர்ந்து போராடுகின்ற நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளி இருக்கிறது. இந்த போராட்டம் எங்களுக்காவும், மாணவ, மாணவிகளுக்காவும் மேற்கொள்ளுகிறோம். தமிழகத்தில் நீட் தேர்வு தேவையில்லை. அதை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.

இதையடுத்து கிராம நிர்வாக ஊழியர்களும் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என்று போராடிக் கொண்டிருக்கும் போது சேலம் மாவட்டம் குரால்நத்தத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா வெயிலின் காரணமாக மயக்கம் போட்டு கிழே விழுந்தார். சக கிராம நிர்வாக அலுவலர்கள் அம்பிகாவை அலேக்காகத் தூக்கிச் சென்று ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றார்கள்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close