அடுத்த வாரம் ஆட்சியை அகற்றுவோம்!- டி.டி.வி.தினகரன் ஆரூடம்

தற்போதுள்ள ஆளும் அரசை அடுத்த வாரத்துக்குள் அகற்றுவோம் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு டி.டி.வி.தினகரன் தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறார். அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,, 'சசிகலா கைக்காட்டிதான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சசிகலாவையே கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அணியினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். தி.மு.க எங்களது எதிர்க்கட்சி. அவர்களுடன் நேரடியாகவோ மறைமுகவோ எங்களுக்குத் தொடர்பு இல்லை.

எனது அணி எம்.எல்.ஏ-க்கள், எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கடந்த மாதம் 22-ம் தேதியே ஆளுநர் மனு அளித்துள்ளோம். ஆனால், அவர் அந்த மனுவின் மீது இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆளும் அரசை கவிழ்க்க முடிவு செய்துவிட்டோம். தற்போதுள்ள அரசை அடுத்த வாரத்துக்குள் அகற்றுவோம்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!