Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி ஆதரவாளர்களுக்குள் திடீர் மோதல்! கடலூர் விழாவில் பரபரப்பு

கடலூரில், அரசு விழா ஒன்றில் எடப்பாடி ஆதரவாளர்களுக்குள் திடீர் மோதலாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கும், எம்.பி. அருண்மொழிதேவனுக்கும் 'கன்னித் தீவு' பகை. இதனால், அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொள்ளும் கட்சி மற்றும் அரசு விழா எதுவாக இருந்தாலும் எம்.பி. அருண்மொழிதேவன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புறக்கணித்து வந்தனர். அதேபோல்தான், அமைச்சரும் அவருடைய ஆதரவாளர்களும் செயல்பட்டுவந்தனர். இருவரையும் அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தி வைத்தார். அப்போதும் அது தீர்ந்த பாடில்லை.

இந்நிலையில், எம்.பி. அருண்மொழிதேவன் இன்று கடலூரில், அவர் நிதியிலிருந்து 16 மாற்று திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் விழா நடத்தினார். இதில் அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இவ்விழாவுக்கு "அமைச்சர் எம்.சி.சம்பத்தை ஏன் அழைக்கவில்லை" என்று கூட்டத்தில் அவருடைய ஆதரவாளர்கள் எகிறினார்கள். பதிலுக்கு, எம்.பி. அருண்மொழிதேவன் ஆதரவாளர்கள், "அவர் நடத்துன விழாவில் எங்களை அழைத்தாரா. அதனால்தான் நாங்கள் அழைக்கவில்லை" என்று பதிலுக்கு எகிற, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அ.தி.மு.க-வினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close