Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரை அ.தி.மு.க அரசு நிலைக்கும்! - சொல்கிறார் சீமான்

'2019 நாடாளுமன்ற தேர்தல் வரை அ.தி.மு.க அரசு நிலைக்கும்' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''நவோதயா பள்ளி கொண்டுவர நினைப்பது, சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தை செயல்படுத்தத் துடிப்பது, நீட் தேர்வைக் கொண்டுவந்தது, என மத்திய அரசு கல்விக்குள் நுழைகிறது.  இந்தி, சமஸ்கிருதத்தை நேரடியாக கொண்டு வரும்போது எதிர்ப்பு வருகிறது, அதே நேரம்  சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்துக்கு மாறினால்தான் மருத்துவராக முடியும் என்று நிர்ப்பந்தம் ஏற்படுத்துகிறார்கள். சரியாக இயங்காத அரசு பள்ளிகளைத் தனியார் வசம் கொடுங்கள் என்று கூறுகின்றனர்.

அதேபோல் நவோதயா பள்ளிவரும்போது சமஸ்கிருதம், இந்தி தானாக வந்துவிடும். 70 ஆண்டுகளாக, கொண்டு வராத நவோதயா பள்ளியை இப்போது கொண்டுவரும் அவசியம் என்ன? ஆளும் அ.தி.மு.க  கைக்கூலி அரசாக இருப்பதால் எதையும் கொண்டுவரலாம் என மத்தியஅரசு நினைக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தல் வரை அ.தி.மு.க அரசு நிலைக்கும்'' என்று கூறினார்.

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் பி.ஜே.பி-யை எதிர்க்கின்றது, மகாராஷ்ட்டிராவில் பி.ஜே.பி-க்கு  ஆதரவாக இருக்கிறதே என்றதற்கு, ''தமிழன் என்ற அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே சீட்டு வழங்கினர்.  அதற்காக  பிரசாரம் செய்தேனே தவிர பி.ஜே.பி-க்கு  ஆதரவு தெரிவிக்கவில்லை'' என்றவர்,  ''ஆளுகின்ற கட்சியை  எதிர்ப்பதால் திருச்சியில் கூட்டம் நடத்த தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement