Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு விலக்கு கேட்டு நடைப்பயண அழைப்பு விடுத்தவர் கைது!

நீட்

நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டும் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் தாம்பரம் அம்பேத்கர் சிலையிலிருந்து எழும்பூர் பெரியார் திடல் வரை நடைப்பயணமாக வர இருந்த இளைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாரதி கண்ணன் என்பவரை காவல்துறை வீடு புகுந்து கைதுசெய்து அழைத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய பாரதி கண்ணனின் நண்பர் ஒருவர், ''தாம்பரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நாங்கள், நீட் விலக்கு கோரி தாம்பரத்திலிருந்து எழும்பூர் வரை நடைப்பயணமாகச் செல்ல இருந்தோம். இதை அறிந்து போலீஸ் நேற்றே எங்களுக்கு போன் செய்து ‘இதற்கு அனுமதியில்லை. அத்துமீறி செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். பாரதியும், “நாளை காலை கூடும் மக்களிடம் சிறிதுநேரம் பேசிவிட்டுக் களைந்து விடுகிறோம்” என்று தெரிவித்தார். அப்போது அதற்கு எதும் மறுப்பு கூறாத காவல்துறை இன்று விடியற்காலை பாரதியின் வீட்டில் நுழைந்து அவரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளார்கள். தற்போது வரை அவர் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்கிற தகவல் எதுவும் இல்லை” என்று கவலையுடன் தெரிவித்தார். 

பாரதி கைதுசெய்யப்பட்டதை அடுத்து அம்பேத்கர் சிலை அருகில் நடைப்பயணத்துக்காகக் கூடிய பத்து பேரையும் காவல்துறை கைதுசெய்துள்ளது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close