Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''மக்களை மயக்கத்தில் வைப்பார்... மயங்கமாட்டார்!''- கிம் பற்றி நிபுணர்கள் கருத்து

டகொரிய ஆட்சிக் கட்டிலில் கிம் ஜாங் வுன் ஏறிய பிறகு, அடிக்கடி ஏவுகணை சோதனைச் செய்யப்படுகிறது. ஏவுகணை ஏவுவதை கூட பெரியத் திரைகளில் தங்கள் நாட்டு மக்களுக்கு வட கொரிய அரசு நேரடியாக ஒளிபரப்புகிறது.  இன்று அந்நாட்டு நேரப்படி காலை 6.57 மணிக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ஏவியது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன்

ஜப்பான் மீது பறந்து சென்ற அந்த ஏவுகணை 3,800 கி.மீ தொலைவை 20 நிமிடத்தில் அடைந்து பசிபிக் கடலில் விழுந்தது. ஆகஸ்ட் 6-ம் தேதி ஏவிய ஏவுகணையை விட, இந்த ஏவுகணை  800 கிலோமீட்டர் கூடுதலாக பாய்ந்துள்ளது. வடகொரியாவில் இருந்து அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு 3,400 கிலோமீட்டர் தொலைவில்தான் இருக்கிறது.

பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியாவுக்கு ரூ.7,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் நிலையிலும் இதுபோன்ற சோதனைகளை அந்தநாடு மேற்கொள்கிறது. உலகில் ரஷ்யாவும் சீனாவும்தான் வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ள நாடுகள். மற்றபடி, வடகொரியா உலக அரங்கில் ஒதுக்கப்பட்ட நாடு. தங்கள் மன்னர்தான் எல்லாம் என்று கண்ணைக் கட்டிக்கொண்டு மூடத்தனமாக நம்பும் அப்பாவி மக்கள் நிறைந்த நாடு வடகொரியா. அதனால்தான் வறுமையிலும் ஏழ்மையிலும் உழலுகிறது.

கிம் ஜாங் வுன் போன்றவர்கள் பெயருக்கு வேண்டுமானால் ஏவுகணையை ஏவி விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால், குவாம் தகர்க்கப்பட்டால் வடகொரியாவை அழித்துவிட  அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் ஒரு போதும் தயங்காது. அணு ஆயுதம் வைத்திருப்பது மட்டுமே பாதுகாப்பு என்பது கிம்மின் எண்ணம். 

வடகொரியா குவாமைத் தாக்கினால் அடுத்த நிமிடம் பியாங்யாங்கைத் தகர்க்கும் அளவுக்கு அமெரிக்கா வல்லமை படைத்தது என்பது கிம் ஜாங்குக்கும் தெரியும். கடந்த முறை ஏவுகணை ஏவியபோது  '' அமெரிக்காவுடன் வலியப் போய் போர் இழுத்தால் நீங்கள் தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்'' என்று  வடகொரியாவை சீனா கடுமையாக எச்சரித்தது. 

வடகொரியா ஏவிய சோதனை

இந்தியாவை சமாளிப்பதே சீனாவுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும்போது, அமெரிக்காவையும் பகைத்துக்கொள்ள அந்நாடு தயாராக இல்லை. உலகத் தலைவர்களில் கிம் ஜாங் ஒரு விளையாட்டுப் பிள்ளை. கிம்மின் தாத்தாவும் முன்னாள் அதிபருமான கிம் ஜாங்கைதான் வடகொரிய மக்கள் மிகவும் நேசித்தனர். கிம் ஜாங் மீதுள்ள மயக்கத்தில்தான் கிம் ஜாங் வுன் மீதும் அதிக பற்று வைத்துள்ளனர். 

இதுகுறித்து தென்கொரிய நிபுணர்கள் கூறுகையில் '' மன்னரை கடவுளுக்கு இணையாகக் கருதும் வடகொரிய மக்களை இதுபோன்ற அணு ஆயுதம், ஏவுகணை ஏவுவது, அமெரிக்காவுடன் மோதல்  என்கிற  மயக்கத்தில் கிம் ஜாங் வைத்திருப்பாரேத் தவிர ஒரு போதும் மயங்கி  போரில் இறங்கமாட்டார்.  ஓரமாகப் போய் விளையாடுவதுதான் வடகொரியாவுக்கும் தனக்கும் நல்லது என்பதையும் அவர் அறியாதவர் இல்லை. தங்கள் நாட்டு மக்களை சந்தோஷப்படுத்த அவ்வப்போது ஈடுபடுவார். வடகொரிய ராணுவத்தினர் அதைப் பயன்படுத்தி ஊழலில் திளைக்கின்றனர்' என்று கூறுகின்றனர்.

இரண்டாம் கொரியப் போர் ஏற்பட்டால், வட கொரியாவுக்கு ஆபத்தாகவே முடியும்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close