Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தாமிரபரணி நதிக் கரையிலிருந்து தாமரை மலரும்’ - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை!

நெல்லையில் பா,ஜ.க. சார்பாக நீட் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், தாமிரபரணி நதிக் கரையில் இருந்து தாமரை மலரும் என்று தெரிவித்தார்.  

நயினார் நாகேந்திரன் - பா.ஜ

நீட் தேர்வுக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து மாணவர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் கட்சிகளைக் கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட பா.ஜ.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. கிழக்கு மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமை வகித்தார். இதில் தமிழக முன்னாள் அமைச்சரும் அ.தி.,மு.க-வில் இருந்து அண்மையில் பா.ஜ.க-வில் இணைந்தவருமான நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பலரும் தி.மு.க-வையும் மு.க.ஸ்டாலினையும் கண்டித்துப் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், ’’நீட் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் பொய்ப் பிரசாரம் செய்கின்றன. குறிப்பாக தி.மு.க-வும் அந்தக் கட்சியின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினும் மாணவர்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றார்.

பா.ஜ ஆர்ப்பாட்டம்

பிணத்தின் மீது அரசியல் செய்வது தி.மு.க-வுக்கு கைவந்த கலை. அதனையே அனிதா மரணத்திலும் அந்தக் கட்சி செய்து வருகிறது. நீட் விவகாரத்தில் தி.மு.க உள்ளிட்ட உதிரிக் கட்சிகள் தவறான கருத்தை தங்களின் சுயநலனுக்காக தொடர்ச்சியாக பொய்யாக பரப்பி வருகிறார்கள். அனிதா மரணத்தின் பின்னணியிலுள்ள விவரங்களை வெளிக் கொண்டுவர வேண்டும். அனிதா தற்கொலைக்குப் பின்னணியில் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பலர் இருக்கிறார்கள். அதனால் அதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது நிலையற்ற ஆட்சி நடைபெறுகிறது. தாமிரபரணிக் கரையில் இருந்து தாமரை மலர்ந்து தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும். திராவிடக் கட்சிகளின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி அமைய வேண்டும் என்பதையே தமிழக மக்கள் விரும்புகிறார்கள். அதனால் பா.ஜ.க. மீது தமிழக மக்கள் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கூட்டமாகப் பங்கேற்றனர். மக்களின் ஆதரவுடன் தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close