Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எடப்பாடி பழனிசாமிக்கு கறுப்புக் கொடி காட்டத் தயாராகிறார்களா சொந்த மாவட்ட மக்கள்?

சேலம் மாவட்டத்துக்கு நாளை செல்லவுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட பா.ம.க தொண்டர்கள் தயாராகி வருவதாக தெரிகிறது. 

விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வரும் 17-ம் தேதி சமூக நீதி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்காக சேலத்தில் இருந்து தொண்டர்கள் செல்வதற்கு ஆளும் அரசு சிக்கல் ஏற்படுத்துவதாகவும் அதற்காக நாளை சேலம் செல்லவுள்ள முதல்வருக்கு பா.ம.க தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டத் தயாராக இருப்பதாகவும் தெரிகிறது. 


இதுப்பற்றி சேலத்தைச் சேர்ந்த பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் அருளிடம் கேட்டபோது, ''எங்கள் கட்சியின் சார்பாக ஒன்றரை மாதத்துக்கு முன்பே விழுப்புரத்தில் சமூக நீதி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதுகுறித்து அறிவித்த உடனே சேலம் பா.ம.க. நிர்வாகிகள் கலந்து ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் மாவட்டத்திலிருந்து 1,000க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தோம். 

அதற்காக சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களையும் சந்தித்து அவர்களிடம் உள்ள பஸ்களுக்கு முன் பணம் கொடுத்து பதிவுசெய்து விட்டோம். அவர்கள் நிச்சயமாக மாநாட்டுக்கு பஸ்களை அனுப்புவதாக உறுதியளித்தார்கள். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனியார் பஸ் உரிமையாளர்களிடம் போனில் பேசி பா.ம.க., மாநாட்டுக்கு பஸ் அனுப்பக் கூடாது. மீறி பஸ் அனுப்பினால் வண்டியின் பெர்மிட்டை கேன்சல் செய்துவிடுவோம் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநாட்டுக்கு வர முடியாது. மீறி வந்தால் எங்களுடைய பெர்மிட் ரத்து செய்துவிடுவதாக ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். நாங்கள் என்ன செய்யமுடியும். தயவுசெய்து நீங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று அனைத்து தனியார் பஸ் உரிமையாளர்களும் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள்.     
இந்த பூச்சாண்டி வேலைகளுக்கெல்லாம் பா.ம.க. பயப்படாது.

மாநாட்டுக்குச் செல்வதற்கு திறந்த வெளி லாரிகள், வேன்கள் பேசி இருக்கிறோம். அந்த வாகனங்களில்தான் செல்ல இருக்கிறோம். மத்திய அரசின் எடுபுடியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு கறுப்புக் கொடி காட்டும் அளவுக்கு அவர் வொர்த் இல்லை'' என்றார்.  ஆனால் சில பா.ம.க., தொண்டர்கள் நாளை சேலம் வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்டவும் முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close