Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் மயங்கி விழுந்த அரசு ஊழியர்கள்..!

புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருந்தார்கள். 

தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகம் முற்றுகை, சாலைமறியல், ஒப்பாரி வைத்தல் என பல்வேறு வழிகளில் போராட்டங்களை நடத்திய நிலையில், கடந்த மூன்று தினங்களாக ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தங்கிக் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தத் துவங்கினார்கள். போராட்டக்காரர்களுக்கான மூன்று வேளை உணவும் அங்கேயே தயாரித்துக்கொண்டு, ஆட்சியரக வளாகத்திலேயே தங்கிக்கொண்டு இருந்தவர்களை நேற்றைய தினம் நள்ளிரவில் கைதுசெய்து வெளியேற்றியது காவல்துறை.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் மாவட்ட ஆட்சியரக வளாகத்துக்குள் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் நுழைய முயன்றதால், காவல்துறைக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களைத் தடுக்க முற்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். பின்னர் போராட்டக் குழுவிலேயே மருத்துவர்களும் இருந்ததால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மயக்கமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

போராட்டக்காரர்கள், அதைத் தொடர்ந்து காவல்துறைக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்த காவல்துறை, அருகில் உள்ள மணடபத்தில் அவர்களை தங்கவைத்தனர். அச்சமயத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநிலத் தலைமை தங்களின் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close