இந்திய வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெறும் ஒன் ப்ளஸ் நிறுவன ஸ்மார்ட் போன்கள்..!

oneplus

இந்தியாவில் எந்த மொபைல் நிறுவனம் அதிக நன்மதிப்பைப் பெற்றிருக்கிறது என்ற ஆய்வில் மற்ற அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது ஒன்பிளஸ் நிறுவனம். சைபர்மீடியா என்ற நிறுவனம் பல்வேறு பிரிவுகளில்  நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் கால் பதித்தது முதல் அறிமுகப்படுத்திய அனைத்து மொபைல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. மொபைலில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்ப்பது, மொபைலுக்கான உதிரிப்பாகங்கள் கிடைப்பது, மொபைலின் தரம் ஆகிய பிரிவுகளில் மற்ற மொபைல் நிறுவனங்களைவிட ஒன் பிளஸ் முன்னிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பயன்படுத்திய மொபைல்களின் ரீசேல் மதிப்பிலும் ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களே முன்னிலையில் இருக்கிறது. அதிலும் ஒன்பிளஸ் மொபைல் வைத்திருப்பவர்கள் அதே மொபலை மற்றவர்கள் வாங்குவதற்கும் அதிகமாகப் பரிந்துரை செய்கிறார்களாம். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற மொபைல் நிறுவனங்கள் பட்டியலில் ஒன் பிளஸ் நிறுவனத்துக்கு அடுத்ததாக ஆப்பிள் நிறுவனமும் அதற்கடுத்ததாக விவோ நிறுவனமும் இருக்கின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!