மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார்..! கமல்ஹாசன் அதிரடி

மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துகளை வெளியிட்டுவருகிறார். மேலும், அரசியலுக்கு வர விருப்பம் இருப்பதுபோன்றும் கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுவந்தார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'நான் தொழிலுக்காக நடித்து வருகின்றேன். ஆனால், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் போராடுவதே ஆரம்பம். அஹிம்சையின் உச்சகட்டம் போராட்டம். மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயாராக இருக்கிறேன். அரசியலுக்கு வந்தபின் ரஜினியிடம் அரசியல் குறித்து பேசுவேன். ரஜினி விரும்பினால் எனது அணியில் இணைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். எனது வாரிசுகளுக்காக அரசியலுக்கு வருவதாக கூறவில்லை மாற்றம் தேவை என்றுதான் அரசியலுக்கு வருவதாகக் கூறினேன்' என்று தெரிவித்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!