வெளியிடப்பட்ட நேரம்: 02:36 (16/09/2017)

கடைசி தொடர்பு:10:05 (16/09/2017)

மனித உரிமை குறும்படப் போட்டி கெடு 25-ம் தேதிவரை நீட்டிப்பு

மனிதவுரிமை ஆணையம்

மனித உரிமைக் குறும்படங்கள் போட்டிக்கான கெடுவை தேசிய மனித உரிமை ஆணையம் வரும் 25ஆம் தேதிவரை நீட்டித்துள்ளது. 

மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் திரைப்படப் படைப்பாக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களை உற்சாகப்படுத்தும்வகையில், ஆண்டுதோறும் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். 

இந்திய மொழிகள் ஏதாவது ஒன்றில் ஆங்கிலக் குறிப்புகளுடனோ அல்லது படமே ஆங்கிலத்திலோ இருக்கலாம். மூன்று நிமிடங்களுக்குக் குறையாமல் 10 நிமிடங்களுக்கு மிகாமல் படம் இருக்கவேண்டும். மனித உரிமை மீறலைச் சரிசெய்யும் தீர்வுகளையும் மனித உரிமையைப் பாதுகாக்கும் செயற்பாட்டாளர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் பற்றியதாக இந்தப் படங்கள் இருக்க வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 

படங்களை அனுப்ப செப்டம்பர் 15 கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது 10 நாள்கள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையத்தின் www.nhrc.nic.in இணையதளத்தில் பார்க்கலாம்.