Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனுஷ்கோடி கடல் அலைகளோடு செல்பி எடுக்க முயன்ற மாணவர் மாயம்

1964-ம் ஆண்டு ஏற்பட்ட  ஆழி பேரலையில் சிக்கிய துறைமுக நகரமான தனுஷ்கோடி சின்னாப்பின்னமானது. இதனால் தனுஷ்கோடி மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாக அரசால் அறிவிக்கப்பட்டது. என்றாலும் கூட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் கருதி அங்கே தங்கி மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் தவிர தனுஷ்கோடி அரிச்சல் முனை கடல் பகுதியில் சிறப்புப் பூஜைகள் செய்ய யாத்திரீகர்களும், புயலின் பிடியில் சிக்கி எஞ்சி நிற்கும் நினைவு சின்னங்களைப் பார்க்கவும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் தனுஷ்கோடிக்குப் பயணிக்கின்றனர். இவர்கள் தனுஷ்கோடியின் இறுதி வரை சென்று வரும் வகையில் மத்திய அரசு புதிய சாலை அமைத்துள்ளது.

தனுஷ்கோடி கடல் அலையில் சிக்கி மாணவர் மாயம் 
 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள தனியார்ப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 12 பேர் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர். பின்னர் தனுஷ்கோடிக்குச் சென்ற இவர்கள் முகுந்தராயர் சத்திரம் தென்கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்கு தளத்தில் நின்று கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் எழுந்த ராட்ஷச அலைகளோடு செல்பி எடுக்க முயன்ற அஜித்குமார் என்ற மாணவர் கடலில் தவறி விழுந்தார். உடனிருந்த சக மாணவர்கள் கடலில் மூழ்கிய மாணவர் அஜித்குமாரை மீட்க அப்பகுதியில் இருந்த மீனவர்களை உதவிக்கு அழைத்தனர். ஆனால், அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் மீனவர்களால் அஜித்குமாரை மீட்க இயலவில்லை. 


இதையடுத்து, தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸார் கடலில் விழுந்த மாணவர் அஜித்குமாரைத் தேடி வருகின்றனர். மாயமான மாணவர் அஜித்குமார் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement