Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழ்நாட்டுக்குப் போங்க!' - தமிழக விவசாயிகளை விரட்டும் டெல்லி மருத்துவர்கள்

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயிகள், கடந்த 62 நாள்களாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த விவசாயிகள், கடைசியாக மனித மலம் தின்னும் போராட்டத்தை நடத்தினர். இந்த நிலையிலும் மத்திய அரசின் சார்பாக விவசாயிகளை யாரும் சந்திக்கவில்லை. 

டெல்லி விவசாயிகள் போராட்டம்

இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்து வரும் அய்யாக்கண்ணுவிடம் பேசினோம், "முதற்கட்டமாக, கடந்த மார்ச் மாதம்அய்யாசாமி முதல் 41 நாள்களும், ஜூலை 16 முதல் இன்று வரை 62 நாள்கள். ஆக மொத்தம் 103 நாள்களாகப் போராடி வருகிறோம். நடுரோட்டில்தான் சாப்பாடு, போராட்டம், தூங்குமிடம் எல்லாம்.  தேர்தல் நேரமாக இருந்திருந்தால் எங்களை வந்து பார்த்திருப்பார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருப்போம். மற்ற நேரங்களில் இரண்டாம் தர குடிமக்கள் ஆகிவிடுவோம். எங்களை அடிமைகளைப் போலவும், தீண்டத்தகாதவர்களைப் போலவும்தான் பிரதமர் மோடி பார்க்கிறார். எங்களை அழைத்துப் பேச மறுக்கிறார். அவர் வரமுடியாவிட்டாலும் பரவாயில்லை, அவரின் அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ அனுப்பி எங்களைப் பார்க்கலாம். ஆனால், எங்களை அவர் தீண்டத்தகாதவர்களாக நினைக்கிறார். அதனால்தான் பேச மறுக்கிறார். 

இந்தியாவில் தற்போது நடந்துவருவது ஜனநாயக ஆட்சி அல்ல. சர்வாதிகார ஆட்சி. பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி போலத்தான் நடந்துகொள்கிறார். நாங்களும் 103 விதமான போராட்டங்களைச் செய்துவிட்டோம். உச்சபட்சமாக, மனித மலத்தைத் தின்றோம், இறந்த பிணங்களைத் தின்றோம் 6,666 ரூபாய் பிச்சை எடுத்து வைத்திருக்கிறோம்; பிரதமர் மோடியைச் சந்தித்து நதிகள் இணைப்புக்குக் கொடுக்க.

நாளுக்கு நாள் விவசாயிகளின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே செல்கிறது. வெயில் காலத்தில் கொப்புளங்கள் வந்து கஷ்டப்பட்டோம். இப்போது மழைக்காலத்தில் காய்ச்சல் வந்து கஷ்டப்படுகிறோம். இதனால், 141 விவசாயிகள் உடல் நலம் சரியில்லாமல் ஊருக்குச் சென்றுவிட்டனர். மருத்துவம் பார்க்கலாம் என்று ராம் மனோகர் லோகி, எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளுக்குச் சென்றால், தமிழ்நாட்டு விவசாயிகள் என்பதால், மருத்துவம் செய்ய மறுக்கின்றனர். 'தமிழ்நாட்டுக்குப் போ' என்று விரட்டுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்றார் சோகமான குரலில்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close