Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெற்றோர்களைக் கவனிக்காவிட்டால் 10% சம்பளம் கட்!

'பெற்றோர்களையும் உடன்பிறந்தவர்களையும் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10 சதவிகித தொகை பிடித்தம் செய்யப்படும்' என்ற சட்டத்தை அஸ்ஸாம் மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது.

பெற்றோர்

இன்றைய காலகட்டத்தில், தங்களைப் பெற்று ஆளாக்கி வளர்த்த பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையும் கருணையும், வெகுவாக மனிதர்களிடையே குறைந்துவருகிறது. இதனால், வயதான பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 

இதைத் தடுப்பதற்காக, அஸ்ஸாம் மாநில அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அதன்படி, பெற்றோர்களையும் உடன் பிறந்தவர்களையும் கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து 10 சதவிகித பணம் பிடித்தம்செய்யப்படும் என்றும் அந்தத் தொகை, அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில், முதன்முறையாக இப்படி ஒரு சட்டத்தை அசாம் மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close