Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லண்டன் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு: ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது

லண்டன் ரயில் குண்டுவெடிப்பு, london

மேற்கு லண்டனில், பல முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது, சுரங்க ரயில் போக்குவரத்து. நேற்று, இந்த ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்தனர். லண்டன் நேரப்படி நேற்று காலை 8.20 மணியளவில், பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் பயங்கரச் சத்தத்துடன் அங்கிருந்த மர்மப் பொருள் ஒன்று வெடித்தது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த பயணிகள் அலறியடித்து ரயிலிலிருந்து இறங்கி ஓடினர். பலர் படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சரிந்தனர்.  

உடனடியாக பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்கள், பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்திலும் குண்டு வைக்கப்பட்ட அந்த ரயிலிலும் சோதனை நடத்தினர். அப்போது, வெடிக்காத நிலையில் இருந்த குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த ரயில் குண்டுவெடிப்புக்குத் தற்போது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த இயக்கத்தின் செய்தி நிறுவனம், இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close