கடற்கரை தூய்மைப் பணியில் கடலோரக் காவல்படை வீரர்கள்!

சர்வதேசக் கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில், இந்தியக் கடலோரக் காவல் படையினர் தலைமையில் தூய்மைப் பணி நடந்தது.

சர்வதேசக் கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள கடற்கரைகள் மற்றும் கடலோர எல்லைப் பகுதிகளில் கடற்கரை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், 'தூய்மை தினம்' கடைபிடிக்கப்பட்டுவருகிறது இதைத் தொடர்ந்து, மண்டபம் கடலோரக் காவல்படை நிலையத்தின் சார்பில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 

தூய்மை பணியில் ஈடுபட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், முனைவர் நடராஜன் தொடங்கிவைத்த இந்தத் தூய்மைப் பணியில், மண்டபம் கடலோரக் காவல்படை கமாண்டர் ராமாராவ் தலைமையில், கடலோரக் காவல்படையினர், இந்தியக் கடற்படையினர், சுங்கத்துறையினர், அழகப்பா பல்கலைக்கழக மாலை நேரக் கல்லூரி மாணவ மாணவிகள், ராமேஸ்வரம் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, யாத்திரை செய்பவர்களால் கடலில் விட்டுச் செல்லும் துணிகள், கழிவுப் பொருள்கள் ஆகியவற்றைச் சேகரித்துத் தூய்மைப்படுத்தினர்.
மேலும், கடற்பரப்பைத் தூய்மையாக வைத்துக்கொள்வதன்மூலம் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்பதுகுறித்து மாணவர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரமும் மேற்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!