ஆசிய நீச்சல் போட்டியில் 4 பதக்கங்களைப் பெற்ற மதுரை வீரருக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய நீச்சல் போட்டியில் நான்கு பதக்கங்களை வென்று, நாட்டுக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல் மதுரைக்கும்  புகழைத் தேடித்தந்த விக்காஸு க்கு உற்சாகமான வரவேற்பு இன்று அளிக்கப்பட்டது.

ஒன்பதாவது ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டி, கடந்த  8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்டில் நடந்தது. இதில் 47 நாடுகள் கலந்துகொண்டன. இந்தியாவிலிருந்து 38 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில்,  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்  ஐந்து பேர். இந்தப் போட்டியில்,  5 தங்கம், 13 வெள்ளி, 22 வெண்கலப்பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்றனர். மதுரை வீரர் விக்காஸ், 50 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சல் மற்றும் 100 மீட்டர் ப்ரீஸ்டைல் நீச்சலில் வெண்கலமும், 400 மீட்டர் மேட்லே ரிலேயில் வெள்ளியும், 400 மீட்டர் ப்ரீஸ்டைல் ரிலேயில் தங்கமும் பெற்று சாதனை படைத்துள்ளார். தனி நபர் தங்கம் வென்றதில் தமிழக அளவில் விக்காஸ் மட்டும்தான்.

விக்காஸ்

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து நீச்சல்போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளைச் செய்து வருகிறார் விக்காஸ். கடந்த பத்தாண்டுகளில் மாநில,தேசிய அளவில் 60-க்கும் மேற்பட்ட  நீச்சல்போட்டிகளில் கலந்துகொண்டு 150 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.  இன்று மதுரை வந்த விக்காஸை, தமிழக ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலைராஜாவும், பயிற்சியாளர் சரோஜினியும் சாரட் வண்டியில்  ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். அடுத்து ஒலிம்பிக்தான் ...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!