Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’பெரும்பான்மையை நிரூபிப்போம்’: திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

'நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றுவிட்டால், எங்களுக்கு சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறோம்' என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார். 

அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன்

திருச்சி சறுக்குபாறை பகுதியில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ”அண்ணா அளப்பறிய பேச்சாற்றல் கொண்டவர், நாட்டு மக்களுக்காக திராவிட முன்னேற்ற கழகத்தை தனது காலம் வரை தோற்றுவித்தவர். அதோடு இயக்கத்தைத் தொய்வில்லாமல் நடத்திச் சென்றவர். அவரது மறைவுக்குப் பிறகு கழகத்தைத் துவங்கிய எம்.ஜி.ஆர் சிறப்பாக வழி நடத்திச் சென்றார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் கட்சி சந்தித்த இன்னல்களை இப்போது நாம் அம்மா மறைவுக்குப் பின்னர் சந்தித்தோம். ஆனால், குறுகிய காலத்தில் மீண்டும் இணைந்துவிட்டோம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் இணைந்ததற்கு 98 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்தனர். பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. தொண்டரை கண்டுபிடித்து, சட்டமன்ற உறுப்பினராக்கி, அமைச்சராக்கி என்னை கௌரவப்படுத்திய அம்மாவுக்கு எந்தத் தீங்கும் இழைத்தது இல்லை. அம்மா இன்னும் உயிரோடு இருப்பதாகவே உணர்கிறோம். அதே காரணத்தால்தான் பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

பல பிரச்சினைகள் வந்த போதும் இயக்கத்தைவிட்டு யாரும் வெளியேறவில்லை என்பது பெருமையாக உள்ளது. தி.மு.க-வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்கள்போல் செயல்படுகிறார்கள். சாதாரண தொண்டனுக்கு மதிப்பளிப்பது அ.தி.மு.க மட்டும்தான். அம்மா எப்படி இருந்தாரோ அப்படித்தான் எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் கழகத்தை வழிநடத்துவதுடன், இரட்டை இலைச் சின்னத்தைக் கண்டிப்பாக மீட்டெடுப்பார்கள்.

குடும்ப அரசியல் இருக்கக் கூடாது என்பதை உணர்த்த நிரந்தரமாக நீக்க வேண்டும் எனப் பொதுக்குழுவில் பேசியபோது வானகரம் பகுதியில் மட்டும் மழை பெய்தது. சசிகலா, தினகரன் இருவரும் திருடர்கள் என்றவர், தி.மு.க-வின் தலைவராகவே முடியாத ஸ்டாலின் தமிழக முதல்வராக முடியுமா? என முதல்வர் எடப்பாடி கேட்டார். அதைக் கண்டு கோபமடைந்த ஸ்டாலின் பெரும்பான்மையை நிரூபித்து விட்டுப் பேசட்டும் எனச் சவால் விடுகிறார். கடந்த முறை இதே ஸ்டாலின் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, அதில் ஸ்டாலின் தோற்றபோது, ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டாமா ?

நிச்சயமாக மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் வெற்றி பெற்று பெரும்பான்மையை நிரூபிப்போம். நிரூபிக்க முடியாமல் போனால் சூடு, சொரணை, வெட்கம், மானம் இல்லை என்பதை ஒப்புக்கொள்வோம். நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்தால் ஸ்டாலின் அரசியலைவிட்டு வெளியேறத் தயாரா? அல்லது தி.மு.க செயல் தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாரா?” என்றார்.

வெல்லமண்டி நடராஜன் தொடர்ந்து சசிகலா, தினகரன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருவதுடன், தற்போது ஸ்டாலினுடன் சவால் விட்டிருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close