Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தே.மு.தி.க செயற்குழு, பொதுக்குழு தேதிகளை அறிவித்தார் விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை செப்டம்பர் 30-ம் தேதி காரைக்குடியில் நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். 

விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். சில நாள்களாக விஜயகாந்த்தின் உடல்நிலை சரியில்லை என்று தகவல் வந்துகொண்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், அ.தி.மு.க-வின் உட்கட்சி குழப்பம் உச்சத்தில் இருக்கிறது. இந்நிலையில், தி.மு.க மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த வாரம் கூறப்படும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் தே.மு.தி.க செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்டியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close