Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாரண-சாரணியர் இயக்கத் தேர்தலில் வெற்றி பெற்ற மணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து..

தமிழ்நாடு சாரண-சாரணியர் இயக்கத் தேர்தலில் வெற்றிபெற்ற முன்னாள் கல்வித் துறை இயக்குநர் மணிக்கு தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சாரண-சாரணியர் இயக்கத் தேர்தல் இன்று நடைபெற்றது. சாரண-சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கு பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் முன்னாள் கல்வித்துறை இயக்குநர் மணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் மணி 232 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். ஹெச்.ராஜா, வெறும் 52 வாக்குகள் மட்டும் பெற்று தோல்விஅடைந்தார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு பாரத சாரணர்-சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள மணி அவர்களுக்கு வாழ்த்துகள். அதிகார பலத்தை மீறி தொண்டுணர்வு பெற்றுள்ள இந்த வெற்றி மாணவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் துணை நிற்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close