மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தி 1100 கி.மீ தூரம் மாணவர்கள் சைக்கிள் பயணம்

புவி வெப்பமடைதல் மற்றும் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு விழிப்பு உணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புவி வெப்பமடைதல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியும் 1100 கி.மீ தூரம் சைக்கிள் பிரசார பயணத்தை மேற்கொண்டனர்.

மாணவர்கள் சைக்கிள் பிரச்சார பயணம்

கடந்த 7-ம் தேதி சென்னையில் தொடங்கிய இந்த சைக்கிள் பிரசார பயணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கோவை, கரூர், தஞ்சாவூர், காரைக்குடி, ராமநாதபுரம் வழியாக 1100 கி.மீ பயணம் மேற்கொண்டு இன்று ராமேஸ்வரத்தில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் நினைவிடத்தை அடைந்தது. அங்கு கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர்கள் நினைவிடத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இவை தவிர வரும் வழிகளில் உள்ள கிராமங்கள்தோறும் புவிவெப்பமடைதல் மற்றும் மழைநீர் சேகரிப்புகுறித்து குறும்படங்கள் திரையிட்டும், வீதிநாடகங்கள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் போன்றவற்றின் மூலம் விழிப்பு உணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!