விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் தேசிய மேடையின் இரண்டாவது அகில இந்திய மாநாடு 

விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் இரண்டாவது அகில இந்திய மாநாடு  இன்று தொடங்கியது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால கவுடா தொடங்கி வைத்தார். இன்றைய மாநாட்டில் பல மாநிலங்களிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்தனர்.

விருதுநகர்


இந்த மாநாடு பற்றி நம்மிடம் பேசிய தலைவர் ஜான்சிராணி, செயலாளர் முரளிதரன், பொருளாளர் நம்புராஜன் ஆகியோர், ''மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக  தேசிய மேடை 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 14 மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். 2013-ம் ஆண்டு எர்ணாகுளத்தில் முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது. தற்போது இரண்டாவது மாநாடு விருதுநகரில் நடைபெறுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதுமுள்ள பெரும்பகுதி மாற்றுத்திறனாளிகளின் மோசமான வாழ்நிலை பற்றியும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றியும் கல்வி, வேலை வாய்ப்பில் அவர்கள் புறக்கணிக்கப்படுவது பற்றியும், அரசாங்கம் அறிவிக்கும் உதவித்தொகைகள், நலத்திட்டங்கள் மிகவும் குறைவானவர்களுக்கே கிடைப்பது பற்றியும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. நாளை தேசபந்து மைதானத்தில் பிரமாண்ட பேரணி தொடங்குகிறது. இறுதியாக மாற்றுத்திறனாளிகளுக்காக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்தவரான பிருந்தா காரத் சிறப்புரை ஆற்றுகிறார். இந்த மாநாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் '' என்றனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!