பெரியாரும் மோடியும்! - இருவேறு துருவங்களின் பிறந்தநாள் இன்று!

செப்டம்பர் 17ம் தேதியான இன்றைய தினத்தை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்துவிடல் ஆகாது. தமிழ்ச் சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் உருவாக வித்திட்ட பகுத்தறிவு பகலவன் பெரியார் என்று எல்லோராலும் போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமியும், பாரத பிரதமர் நரேந்திர மோடியும் இந்த ஒரே நாளில் பிறந்திருப்பது என்பது மிகவும் விசித்திரமானதுதான். ஏனெனில் இவர்கள் இருவேறு துருவங்கள். நரேந்திர மோடி பிறக்கும்போது பெரியாருக்கு வயது 71. 

பெரியாரும் மோடியும்

பெண்களின் முன்னேற்றம், சாதி தீண்டாமையை ஒழித்தல், கடவுள் மற்றும் மதம் குறித்த பார்வை என பல அத்தியாவசிய கருத்தாக்கங்களை தமிழின மக்களிடையே விதைத்தவர் தந்தை பெரியார். காலம் அனைத்தையும் மாற்றும் திறன் கொண்டிருந்தாலும் அந்த மாற்றத்தை நிகழ்த்த எதோ ஒரு சக்தி அவசியமாகிறது. அத்தகைய தவிர்க்க முடியாத சக்தியாக தனது காலத்தில் திகழந்தவர் பெரியார். கடைசிவரை தனது கொள்கைகளில் பிடிவாதமாக இருந்த சுயமரியாதைக்காரர். இன்றும் நீதிக்கும் நேர்மைக்கும் தலைதூக்கும் கோபத்துக்கெல்லாம் இவரே அடித்தளமாக இருக்கிறார். இந்தத் தமிழ் சமூகத்தின் பல மாற்றங்களுக்கு இவரே சூத்திரதாரி.

பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோடி தன்னளவில் தனது வாழ்வில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. அவரது வாழ்வின் திருப்புமுனைகள் யதார்த்தமாக அவருக்கு வாய்த்திருந்தாலும்கூட அதனைப் பயன்படுத்திக்கொண்ட விதத்தில் அவரது சாமர்த்தியம் அனைவருக்கும் ஒரு பாடம்.   

இருவருரின் பிறந்தநாளையும் அவர்களது தொண்டர்கள் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!