'கமல்தான் ரஜினியோடு இணைய வேண்டும்' - தமிழருவி மணியன் பேட்டி

'மல்தான் ரஜினியோடு இணைய வேண்டும். ரஜினி கமலோடு இணையத் தேவையில்லை'  தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளை அகற்றுவதற்கு இருவரும் இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும் " என்று காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் புதுச்சேரி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை மூன்று மாதத்துக்கு முன்பே தொடங்கி விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழருவி மணியன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பேசத் துவங்கியதும், அவரின் இல்லத்துக்கே சென்று சந்தித்தார் தமிழருவி மணியன். மேலும் கடந்த மாதம் 20 -ம் தேதி திருச்சியில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் அவசியம் என்று வலியுறுத்தி அரசியல் விழிப்பு உணர்வு மாநாடு ஒன்றையும் நடத்தினார். ரஜினியும் தனது ரசிகர்கள் அனைவரும் இந்த மாநாட்டுக்குச் செல்லவேண்டும் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஏராளமான ரசிகர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

ரஜினி -  கமல்

அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது " தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இக்கட்சிகளைத் தமிழகத்திலிருந்து அகற்றவேண்டும் என காமராஜர் இறுதிமூச்சு உள்ளவரைக் கூறினார். அதை நிறைவேற்ற பல  முயற்சிகளை எடுத்தேன். ஆனால் எதுவுமே பலனளிக்கவில்லை. கடைசிக் கருவியாக ரஜினி கிடைத்துள்ளார். இதுதான் கடைசி வாய்ப்பு. இதை விட்டால் தமிழகம் எழவே வாய்ப்பில்லை. அழுகிக்கிடக்கிற அரசியலை ஒழித்து, வெளிப்படையான ஆட்சியைத் தருவதற்காக ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார். கவுன்ட் டவுன் ஆரம்பமாகிறது. ஊழலற்ற தூய்மையான ஆட்சியைக் கொடுப்பதற்காகவே நான் அரசியலுக்கு வருகிறேன்’ என்று என்னிடம் சொல்லியிருக்கிறார் ரஜினி. அதை நான் முன்னெடுக்கிறேன். அவ்வளவுதான்! என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!