Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குறைந்தது மேட்டூர் அணையின் நீர்மட்டம்!

கர்நாடகா மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்ததால் மேட்டுர் அணையின் நீர்வரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணை

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகளிலிருந்து அதிக அளவு உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 அடியையும் தாண்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததாலும் காவிரி புஷ்கர விழாவை முன்னிட்டு அதிகளவு அணை நீர் திறந்து விடப்பட்டதாலும், அணையின் நீர்மட்டம் தற்போது குறைந்து காணப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி புஷ்கர விழாவுக்காக 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து விநாடிக்கு 6,847 கன அடியிலிருந்து 6,523 கன அடியாக குறைந்ததுள்ளது. மேலும், அணையின் நீர் மட்டம் 77.16 அடியாகவும் நீர் இருப்பு 39 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close