Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு: மறு உத்தரவு வரும் வரை குளிக்கத் தடை!

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நேற்று இரவு முதல் கன மழை பெய்துவருகிறது. இதனால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. செங்கோட்டை, புளியரை, குற்றாலம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துவருகிறது. வனப் பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் அதிகமாக வரத் தொடங்கி இருக்கிறது. 

குற்றாலம் மெயின் அருவி

விடுமுறை தினமான இன்று காலை முதலாகவே குற்றாலத்தில் கூட்டம் வரத் தொடங்கியது. சீசன் அருமையாக உள்ள நிலையில் அருவிகளில் குளிக்கப் பயணிகள் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், நீர் வரத்து அதிகமாக இருந்ததால் பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்கத் தடை விதிகப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவிக்குச் சென்று குளித்தனர். ஆனால், அங்கும் தண்ணீர் அதிகமாக கொட்டத் தொடங்கியதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட போதிலும், பழைய குற்றாலம், புலி அருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அங்கு சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் சென்று உற்சாகமாகக் குளித்து மகிழ்கிறார்கள். அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து இருப்பதால் காவல்துறையினரும் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். குளிப்பதற்கு உகந்த நிலை திரும்பியதும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close