'இந்தத் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும்..!' - கமல்ஹாசன் உருக்கம்

தமிழ்ச் சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் உருவாக வித்திட்ட பகுத்தறிவு பகலவன் பெரியார் என்று எல்லோராலும் போற்றப்பட்ட ஈ.வெ.ராமசாமியின் 139-வது பிறந்த நாள் இன்று. பெரியாரின் பிறந்த நாளையொட்டி தமிழக அமைச்சர்கள் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும் புகைப்படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செய்துவருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரியார்குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

கமல்ஹாசன்

இதுகுறித்து கமல்ஹாசன், 'பெரியார் செயலை உணர்வை நினைவைப் போற்றுவோம். 1879, செப்டம்பர் 17-ம் தேதிக்கு தமிழ் இனம் நன்றி சொல்லும். பெரியார் மறுக்க முடியாத உண்மை. வாய்மையே வென்றது' என்று உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!