Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கட்டட கட்டுமானப் பணியில் அசத்திய கலெக்டர்! - ஆச்சர்யத்தில் கடலூர் மக்கள்

கடலூர் அரசு விழாவில் கட்டட கட்டுமானப் பணியில் இறங்கி எல்லோரையும் அசத்தியுள்ளார் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடநேரே.


    

தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறை சார்பிலும் மற்றும் தூய்மை சேவை திட்டத்தின் கீழும், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் "தனி நபர் கழிப்பறை" கட்டும் பணி வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கழிப்பறைக்கும் ரூபாய் 12 ஆயிரம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை இன்று, கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் கிராமத்தில் தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே.
 

   

அப்போது அவர், திடீரென்று களத்தில் இறங்கி, கல்லை எடுத்து வைத்து கட்டுமானப் பணியை தொடங்கினார். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத, உடனிருந்த அதிகாரிகள் விழிபிதுங்கிப்போனார்கள். இதனால் வேறு வழியில்லாமல் அவருக்கு கலவை, கல் எடுத்து கொடுத்து சித்தாள் வேலை செய்தார்கள் அதிகாரிகள். பின்னர், இத்திட்டம் தொடர்பாக, தூய்மை சேவை இயக்கத்தின் கழிவறை கட்டுதல் மற்றும் விழிப்பு உணர்வு பேரணியையும் தொடங்கி வைத்தார் கலெக்டர். இதை ஆச்சரியத்துடன் பார்த்த அக்கிராம மக்கள், "மற்ற மாவட்ட ஆட்சியர்களைப்போல் வந்தோம், நின்னோம், போட்டோவுக்கு போஸ் கொடுப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை என்று இல்லாமல், இது நம்ம வேலை என்று எல்லோருக்கும் சரியாக புரியவைத்திருக்கிறார். இனி கடலூர் மாவட்டத்துக்கு ஒரு விடிவு காலம் வந்துவிடும்" என்று நம்பிக்கை தெரிவித்தனர்.  
                           

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close