Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நெல்லையைக் கலக்கிய அவள் விகடன் ஜாலி டே!

அவள் விகடன் வழங்கும் ஜாலிடே வாசகிகள் திருவிழா நெல்லை பாளையங்கோட்டை செல்வி மஹாலில் இன்று காலை தொடங்கியது . இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

aval vikatan

மகளிருக்கான சிறப்புப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வத்துடன் இலவச அனுமதி சீட்டை பெற்று, விழா நடக்கும் இடத்துக்குச் சென்று உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். 

ஞாயிற்றுகிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது . விழாவின் நிகழ்ச்சி தொகுப்பை சின்னத்திரை நடிகர்கள் அரவிந்த், வடிவேல் பாலாஜி, அஸார் மற்றும் சித்ரா ஆகியோர் தொகுத்தனர்.

அவள்

பாடல், நடனம், நகைச்சுவை என பெண்கள் திருவிழா களைகட்டியது. விழா தொகுப்பாளர்களான சின்னத்திரை நட்சத்திரங்கள் வியக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் பல குரலில் பேசியும் விசில் அடித்தும் கைதட்டியும் அரங்கையே அதிர வைத்தனர்.

விழாவில் பங்கேற்கும் வெற்றியாளர்களுக்கு சத்யா நிறுவனத்தின் சார்பாக பிரிட்ஜ் , வாஷிங் மிஷின் , கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாக வெளியான அறிவிப்புக்கு வரவேற்பு அமோகமாக இருந்தது. 

அவள் விகடனுடன் இணைந்து சத்யா ஏஜென்சீஸ், ஜி.ஆர்.டி. தங்கமாளிகை, அபிராமி ரைஸ், சுப்ரீம் ஃபர்னிச்சர் ஆகிய நிறுவனங்களின் சார்பாக நடைபெற்ற இந்த விழாவில் பெண்களின் கைதட்டல், விசில் சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது. 

மதிய உணவுக்குப் பின்னர் ஜாலி டே திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement