Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநில சுயாட்சிக்காக இளைஞர்கள் ஒரு புரட்சியை முன்னெடுக்கவேண்டும்..! அன்புமணி ராமதாஸ்

மாநில சுயாட்சிக்காக ஜல்லிக்கட்டுப் புரட்சிப் போன்று ஒரு புரட்சியை நடத்தவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சமூகநீதி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், 'மிகவும் பழைமையான ஜனநாயாக நாடான அமெரிக்காவில் ராணுவம் மற்றும் வெளியுறவுத் துறை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மற்ற துறைகளை அந்தந்த மாகாணங்களே முடிவு செய்துகொள்கின்றன. அங்குள்ள ஒவ்வொரு மாகாணங்களுக்கும் ஒவ்வொரு சட்டங்கள்.

அதேப்போல இங்கும் கல்வி, பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட கொள்கைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். மாநில சுயாட்சி என்பது நம்முடைய உரிமை. அது மாநிலப் பிரிவினை அல்ல. கல்வி மாநிலக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவசர காலக்கட்டத்தின்போது இந்திரா காந்தி கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றிவிட்டார். பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது மாநிலங்களுக்கு அதிகாரம் வேண்டுமென்று கேட்டார்.

ஆனால், தற்போது எல்லா அதிகாரங்களையும் அவரே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். நான் மத்தியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும்போது இந்திய மருத்துவக் கவுன்சில் நீட் தேர்வை கொண்டுவர முயற்சி செய்தது. நான் அதைக் கடுமையாக எதிர்த்தேன். தற்போது நீட் தேர்வு திணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு சமூக அநீதி. அது மாநிலத்தின் உரிமையைப் பறிக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்' என்று தெரிவித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close