Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரிக்கு வருகை தந்த அமித்ஷா குடும்பத்தினர்..!

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும் பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவருமான அமித் ஷாவின் மனைவி சோனால் பென் அவரது குடும்பத்தினர் 13 பேருடன் இன்று கன்னியாகுமரிக்கு வந்தார். அவரை கன்னியாகுமரி சன்னதி தெருவில் வைத்து மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார். இன்று இந்தியப் பிரதமர் மோடியின் 67-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கோயில்களில் பா.ஜ.க-வினர் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், அமித் ஷாவின் குடும்பத்தினர் கன்னியாகுமரிக்கு திடீரென வந்தது அனைவரையும் பரபரப்படைய வைத்தது.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் சோனால் பென் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள தியாக சௌந்தரி, பால சௌந்தரி, காலபைரவர் போன்ற சந்நிதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின் பூம்புகார் படகு போக்குவரத்துப் படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் சென்ற அமித்ஷாவின் குடும்பத்தினர் அந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தனர். அங்குள்ள தியான மண்டபங்களிலும் அவர்கள் தியானம் மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து கரைக்கு வந்தப் பின் வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் என முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கால்களை நனைத்தனர். தலையில் கடல் நீரைத் தெளித்து வழிபட்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close