Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவராத்திரி விழாவுக்காக முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் புறப்பட்டார்

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு 1840–ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் இந்த விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வகையில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்துக்கு பல்லக்கில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் மீண்டும் சுவாமி சிலைகள் குமரி மாவட்டத்துக்கு கொண்டு வருவது மரபு.

இவ்வருட நவராத்திரி விழா வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. அதனால் இன்று சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின்போது தமிழக- கேரள போலீஸார் அணிவகுப்பு மரியாதை  செலுத்தினார்கள். தொடர்ந்து கேரள போலீஸார் பேண்ட் வாத்தியங்கள் முழங்க சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில் முன்பு முன்னுதித்த நங்கை அம்மனுக்கு கோயில் சார்பாக திருக்கண் சாத்தி வழிபாடு நடைபெற்றது. பின்னர் நான்கு ரதவீதிகளிலும் அம்மன் வீதிஉலா வந்தார். அப்போது  பக்தர்கள் தங்களின் வீடுகளின் முன்பு விளக்கேற்றியும் திருக்கண்சாத்தியும், மலர் தூவியும் அம்மனை வழிபட்டு வழியனுப்பி வைத்தனர்.

அம்மன் பவனி பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய கேரள போலீஸார் மற்றும் தமிழக போலீஸார் செல்கின்றனர். இன்று இரவு முன்னுதித்த நங்கை அம்மன் பத்பநாபபுரம் அரண்மனையை சென்று அடைகிறார் .அங்கிருந்து நாளை காலை பத்பநாபபுரம் உடைவாள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பல்லக்கு வாகனத்திலும் தேவராகட்டு சரஸ்வதி யானை மீதும் திருவனந்தபுரம் புறப்படுகின்றனர். சுவாமி விக்ரகங்கள் வரும் 20-ம் தேதி திருவனந்தபுரம் சென்று சேருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement