Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"மாற்றுத்திறனாளிக்கு முந்நூறு ரூபாய்... புல்லட் ரயிலுக்கு லட்சத்து எழுபதாயிரம் கோடி" - பிருந்தாகாரத் காட்டம்

மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் இரண்டாவது அகில இந்திய மாநாடு விருதுநகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

இரண்டாவது நாளான நேற்று பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்தனர். நேற்று மாலை தேசபந்து மைதானத்திலிருந்து பேரணி தொடங்கியது. மாநாட்டின் இறுதியாக சிறப்புரை ஆற்றிய சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தாகாரத், ‘’மத்தியில் ஆட்சி செய்வோர் இந்திய அரசியல் சாசனத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகளை வழங்காமல், மனுதர்மத்தின்படி முற்பிறவியில் செய்த பாவத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நம்மையே குற்றம் சுமத்துவார்கள். மாற்றுத்திறனாளிகளை சமஉரிமை பெற்ற மக்களாக நினைப்பதில்லை.

பிருந்தாகாரத்

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்தியஅரசு முந்நூறு ரூபாய்தான் உதவித்தொகை வழங்குகிறது. ஆனால், புல்லட்ரயில் விட லட்சத்து எழுபதாயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இந்த மாநாட்டின் மூலம் அதிகப்படியான ஊனத்துக்கு ஐயாயிரமும், குறைந்தபட்சமாக மூவாயிரமும் உதவித்தொகை வழங்கவேண்டுமென்றும் கோருகிறோம். பொருளாதார வளமுமில்லாத திரிபுராவில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆதார் கேட்காமல், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரே அடையாள அட்டை வழங்கவேண்டும். தமிழகத்தில் பிஜேபி பின்னணியில் ஆட்சி நடைபெறுகிறது. தமிழக கவர்னர், கழுத்துவலி வரும் வகையில் டெல்லி பக்கமே தலையை திருப்பிக்கொண்டிருக்கிறார்.’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement