Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பத்தே நாள்களில் 10,000 கழிப்பறை: சத்தீஸ்கர் முதல்வரைப் பாராட்டிய ஸ்மிருதி இரானி!

'தூய்மை இந்தியா' திட்டம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள கேந்திரி மற்றும் மந்திர் அவுசத் கிராமங்களில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார். அப்போது, "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கிறது என காந்தி கூறுவார். அப்படி கிராமங்கள் தூய்மையாகவும், சுத்தமாகவும் இருக்கும் வகையில் பத்தே நாள்களில் 10,000 கழிப்பறைகளை இம்மாநில முதலமைச்சர் ராமன் சிங் கட்டியிருக்கிறார். இத்தகைய பணியை என்னுடைய அரசியல் வாழ்வில் காண்பது முதல் முறை. இதற்காக ஒத்துழைப்பு கொடுத்த உள்ளூர் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

ஸ்மிருதி இராணி

மேலும், கேந்திரி மற்றும் மந்திர் அவுசத் கிராமங்களில் நடைபெறும் 'தூய்மை இந்தியா' திட்டம் தொடர்பான பணிகளை ஸ்மிருதி இரானி பார்வையிட்டார். பத்தே நாள்களில் 10,000 கழிப்பறைகளைக் கட்டியதுபோல, கேந்திரி மற்றும் மந்திர் அவுசத் கிராமங்களைச் சுற்றியிருக்கும் 91 பஞ்சாயத்துகளிலும் புதிய கழிப்பறைகளைக் கட்டி முடிப்பதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement