Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முல்லைப் பெரியாறு அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து!

முல்லைப் பெரியாறு அணையில், தொடர் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

முல்லைப் பெரியாறு

சில தினங்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவந்தது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 126.10 அடியாக உள்ளது. மேலும், அணையின் நீர் இருப்பு 3,856 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து 1,134 கன அடியிலிருந்து 3,856 கன அடியாகவும் உள்ளது.

தென்மேற்குப் பருவமழையின் காரணமாக அதிகரித்த அணையின் நீர்வரத்து, சற்று குறையத் தொடங்கியிருந்த நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், மணிக்கு 218 அடியாகக் குறைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது முல்லைப் பெரியாறு அணையை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்துவருகிறது.

மேலும், தேனி மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் அப்பகுதியில் உள்ள அணைகள் நிரம்பிவழிகின்றன. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதியில் முழுக் கொள்ளளவான 57 அடிக்கு 55 அடி நீர் தற்போது இருக்கிறது. இந்த நீர் வரத்தின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement