குடும்பத்தலைவரை அதிரவைத்த ஸ்மார்ட் ரேஷன் கார்டு!

மீபத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டில் குடும்பத் தலைவரின் படத்துக்குப் பதிலாக, நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இப்போது தருமபுரியில், குடும்பத் தலைவி புகைப்படத்துக்குப் பதிலாக, செருப்பு அணிந்த கால் புகைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. 

செருப்புக் காலுடன் ஸ்மார்ட் கார்ட்

பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள போசீநாயக்கன்அள்ளி கிராமத்தைச் சேர்ந்த சித்தன் குடும்பத்துக்கு, மனைவி மகேஷின் பெயரில் ரேஷன் அட்டை உள்ளது. இவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில்தான், மகேஷ் புகைப்படத்துக்குப் பதிலாக செருப்பு அணிந்த ஒற்றைக்கால் இடம் பெற்றுள்ளது. மேலும், கணவரின் பெயருடன் சேர்த்து மகேஷ் சித்தன் என்று இடம்பெறுவதற்குப் பதிலாக மாமனார்   சின்னசாமியின் பெயர் இடம்பெற்றுள்ளது. 

இப்படிப்பட்ட ஸ்மார்ட் கார்டைத் தயாரித்து அலுவலர்கள் வழங்கியிருப்பது, பொதுமக்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஸ்மார்ட் கார்ட் வழியாக உணவுப் பொருள்களைப் பெற முடியாத சூழலில், சித்தனின் குடும்பம் உள்ளது. ''சம்பளம் போதவில்லை. போனஸ் போடவில்லை என்று எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், செருப்பு கால் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறதே என்று கூட பார்க்க மாட்டார்களா?. இதற்குத்தான் உங்களுக்கு சம்பளம் தருகிறார்களா?'' என்று பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!