Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செப்டம்பர் 25ல் தூய்மைப்பணி நடைபெறும் இடங்கள்! கரூர் கலெக்டர் அறிவிப்பு

கரூரில் உள்ள அனைத்து முக்கிய இடங்களிலும் வரும் 25-ம் தேதி தூய்மை பணி செய்யப்பட இருப்பதாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  "வரும் 25-ம் தேதியில் கரூரில் உள்ள முக்கிய இடங்களில் தூய்மை சேவை பணி நடைபெற உள்ளது. அதாவது, கரூரில் உள்ள பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது இடங்களில் தூய்மை சேவை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான வழிப்பாட்டுத்தலங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றிலும் தூய்மை சேவைப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  அதைதொடர்ந்து, காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி மேற்படி தூய்மை சேவை பணிகளில் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவித்து பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

ஆகவே, கரூர் மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள், தூய்மைப் பணியில் ஆர்வம் கொண்டவர்கள், இளைஞர்கள் அனைவரும் திரளாக தூய்மை சேவை பணியில் கலந்து கொண்டு, நமது வாழ்விடங்களை, பொது இடங்களை, வழிப்பாட்டுத்தலங்களை தூய்மையாக வைத்திருக்க தூய்மை சேவை பணிகளில் கலந்து கொள்ள வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் ஆய்வினை மேற்கொண்டார். அப்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் உடனிருந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement