Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’நான் முதலமைச்சர் இல்லை’ - உருகிய எடப்பாடி பழனிசாமி

'முதலமைச்சராக என்னை நான் நினைத்துக்கொள்ளவில்லை; இன்றும் முதலமைச்சர் ஜெயலலிதாதான். நான் வெறும் பழனிசாமி தான்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 


சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’'முதலமைச்சராக என்னை நான் நினைத்துக் கொள்ளவில்லை; முதலமைச்சர், ஜெயலலிதாதான். அவர் விட்டுச்சென்ற பணிகளையே நான் தொடர்கிறேன்.ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை யாராலும் கலைக்க முடியாது. சாதாராண தொண்டர்கள்கூட உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற நிலை அ.தி.மு.க-வில் மட்டுமே முடியும். வேறு எந்தக் கட்சியிலும் அப்படி வர முடியாது. தி.மு.க வாரிசு அரசியலை மட்டுமே நடத்தி வருகிறது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர், கட்சியைக் காப்பாற்ற ஜெயலலிதா தியாகங்கள் பல செய்தார். அவருக்குக் குடும்பம் கிடையாது. மக்கள்தான் அவருக்குக் குடும்பம். அவரது ஆசியோடுதான் இந்த ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சியைக் கலைக்க பலபேர் திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஸ்டாலின் எத்தனையோ திட்டம் போட்டார்.  ஆனால், தொண்டர்கள் ஆதரவு இருக்கும் வரை ஆட்சியையோ, கட்சியையோ அசைக்க முடியாது. உழைப்பால்தான் உயர முடியும். மக்கள் பணியை மறந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரப்போகிறது. அதனால் இரவு, பகல் பாராமல் தொண்டர்கள், மக்கள் பணியாற்ற வேண்டும். சேலம் மாநகர் ஜெயலலிதாவின் கோட்டை என்பதைத் தொண்டர்கள் நிரூபிக்க வேண்டும்'' என்று அவர் பேசினார். 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement