Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் புற்றுநோய் விழிப்புஉணர்வு ஓட்டம்!

கனடாவில், புற்றுநோய் ஆராய்ச்சிக்காகத் திரள்நிதி திரட்ட தொடங்கப்பட்ட மாரத்தான் ஓட்டம்தான், டெர்ரி ஃபாக்ஸ் ரன் (Terry Fox Run). இது இந்தியா, கியூபா, பல்கேரியா ,இத்தாலி, வியட்நாம்,போலந்து,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் , துருக்கி, ரோமானியா, ஓமன், சவுதி அரேபியா, ஹாங்காங், பங்களாதேஷ், கத்தார், ஜப்பான், கொரியா, தாய்லாந்து, லெபனான், சீனா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வருடந்தோறும் நடந்துவருகிறது.  

marathon
 

டெர்ரி ஃபாக்ஸ் என்கிற கனடா நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர் பெயரில்தான் இந்த மராத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. டெர்ரி ஃபாக்ஸ் என்பவர், எலும்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர். புற்றுநோய் பாதிப்பால் வலது  காலை அகற்றிய பின்னரும் செயற்கைக் காலுடன் புற்றுநோய் விழிப்புஉணர்வுக்காக கனடா முழுவதும் 143 நாட்கள் ,5373 கிலோமீட்டர் ஓட்டம் மேற்கொண்டு திரள்நிதி திரட்டினார். கார்ப்பரேட் நிறுவனம் பல முன்வந்து, நிதியுதவி செய்கிறோம் என்று கூறியபோதும் அதை மறுத்துவிட்டார். 

marathon
 

இந்தியாவில், மும்பையிலும் சென்னையிலும் இந்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றுவருகிறது. மும்பையில் 19 வருடங்களாகவும் சென்னையில் ஒன்பது வருடங்களாகவும் நடந்துவருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் துபே என்பவர், சென்னைக்கு சிகிச்சை பெறவந்தார். அப்போது அவரின் முயற்சியால், சென்னையில் 2009-ம் ஆண்டு துவங்கப்பட்டது இந்த புற்றுநோய் விழிப்புஉணர்வு ஓட்டம்.

marathon run
 

ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட், ஐ.ஐ.டி. மெட்ராஸ் , அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் நடத்தப்பட்டுவருகிறது. 2009-ம் ஆண்டிலிருந்து ஐ.ஐ.டி மெட்ராஸில் நடந்துவருகிறது டெர்ரி ஃபாக்ஸ் ரன். இந்த வருடம், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த வருடத்துக்கான டெர்ரி ஃபாக்ஸ் ரன், நேற்று அண்ணா பல்கலைக்கழகத்தில் கோலாகலமாக நடந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்டனர். ஆறு கிலோமீட்டர் கொண்டது இந்த ஓட்டம். இதில் பங்குகொள்வோர் ஓட்டம் ,சைக்கிளிங், ஸ்கேட்டிங் செய்துகூட ஆறு கிலோமீட்டரை நிறைவுசெய்யலாம். இது தனி மனித வெற்றிக்கான ஓட்டம் அல்ல; புற்றுநோயை வென்றெடுக்க ஏற்படுத்தப்பட்ட ஓட்டம். ஓட்டத்தை நிறைவுசெய்வதைவிட பங்குகொள்வதே வெற்றி என்பதே, டெர்ரி ஃபாக்ஸ் ரன் மாரத்தானுடைய மோட்டோ.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement