Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் தேசிய அளவிலான உணவு அறிவியல் மாநாடு

சென்னையிலுள்ள  ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரியின் உயிரியல் தொழில்நுட்பத்துறை சார்பாக, 'டிபிடி' ஆதரவுடன் 'சின்போரா' என்ற தேசிய அளவிலான மாநாடு செப்டம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெற்றது.  'தொழில் முனைவோர் சூழ்நிலை, உணவு உலகில் உள்ள வாய்ப்புகள் மற்றும் உயிர்த்துறை செயலாக்கம்' என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெற்றது.

conference

 

இந்நிகழ்ச்சியின்மூலம் ,புரோபயாட்டிக், ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், உணவு பதப்படுத்தும் முறை, உணவு தொழில்நுட்பத்துறை , உணவுத் தர கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு போன்ற தலைப்புகளில், புதுமையான சிந்தனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.

வாய்மொழி வழங்கல், சுவரொட்டி விலக்காட்சியல் போன்ற போட்டிகளில் மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு உதவிசெய்யும் வகையில், தொழில் முனையும் எண்ணமுள்ள மாணவர்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

sinfora

முன்னணி உணவுத்தொழில் துறைகள் மற்றும் மாவட்ட தொழில் துறையின் மையப்பணிகளின் முக்கிய மேலாளர்களின் பங்களிப்புடன் (எம்.எஸ்.எம்.ஈ  இந்திய அரசாங்கம்) மற்றும் முன்னணி தொழில் முனைவோர் குழுவினரிடையே குழு விவாதம் நடைபெற்றது. அதில், உணவுத்துறையில் தற்போது உள்ள வாய்ப்புகள்,சவால்கள், வணிகத்துக்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் வணிகத் தொடக்கம் ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், "இந்த மாநாட்டின்மூலம் ஆராய்ச்சி மற்றும் வணிக வியாபாரத்தில் ஈடுபாடுகொண்ட பார்வையாளர்களுக்கு  நேர்த்தியான  திட்டங்கள் வெற்றிகரமாக  கூறப்பட்டது" என்றனர்.

இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக சென்னை TANUVAS,  உணவு மற்றும் பால் தொழில்நுட்பத்துறை கல்வித் தலைவர் டி.பாஸ்கர், மைசூர்  டி.எஃப்.ஆர்.எல்-ன் உயிர்வேதியியல் துறை தலைவர் பர்ஹாத்  கான், மைசூர் 'சி.எஃப்.டி.ஆர்.ஐ-ன் பழங்கள் மற்றும் காய்கறி தொழில்நுட்பத்துறையின் மூத்த முதன்மை விஞ்ஞானி இபொய்மா சிங் மற்றும் உணவுத் தொழில்நுட்ப மையம், அண்ணா பல்கலைக்கழகத்தின் உஷா அந்தோனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பர்ஹாத் காணும், 'உணவு அறிவியலில் நானோ டேக்னாலஜியின் பயன்பாட்டை விவரித்தார். நானோ பொருள்களை வைத்து நிலத்தடி நீரை மீட்கும் முறைபற்றியும் சென்சார்கள் உதவியுடன் உணவு கெட்டுபோவதைக் கண்டுபிடிப்பது பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார்.

இந்திய பாதுகாப்புத்துறையில் பணிபுரியும் இவர், " எதிரிகள் தங்கள் இருப்பை உணவின் வாசனைமூலம்  கண்டுபிடிக்க வாய்ப்பளிக்கக் கூடாது என்ற காரணத்தால், லெஹ்-லடாக் பகுதியில் உள்ள ராணுவ வீரர்கள் ருசியான உணவுகளைத் தவிர்க்கின்றனர்" என்று கூறினார்.

மேலும் பேசிய இபொய்மா சிங், தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பார்கள் பற்றி பேசினார். உணவு பாதுகாப்பு, உணவு சேமிப்பு, இன உணவு போன்றவற்றில் லாபம் ஈட்டும் முறையை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார்..

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் கூறுகையில், "இந்த மாநாட்டின் மூலம் எங்களுக்கு புதுமுறை காணல் மற்றும்  கூர்ந்தாராயும் திறமையை வெளிப்படுத்த உதவிகரமாக இருந்ததது" என்றனர்.

இந்த மாநாட்டில் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலிருந்து 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும்  மேற்பட்ட மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement