'வனவிலங்குகளையும் விவசாயத்தையும் காப்பாற்றுங்கள்' - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சுவரக்கோட்டை

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, சிவரக்கோட்டை பகுதியைப் பாதுகாக்கப்பட்ட மானாவாரி வேளாண் மண்டலமாகவும் , காட்டுவிலங்குகள் வாழும் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட காட்டுயிர்ப் பகுதியாகவும் அறிவித்து,  ஆவன செய்யக்கோரி, நாணல் நண்பர் இயக்கம் மற்றும் விவசாய சங்கத்தினர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அதில், "மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை சிப்காட் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்திவருகிறது. அங்கு, தொடர்ச்சியாக மானாவாரி வேளாண்மை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் விளையும் குதிரைவாலி, சோளம், கம்பு, வரகு, உளுந்து உள்ளிட்ட பயிர்கள்மூலம் கடந்த 10 வருடமாக அரசு பயன்பெற்றுவருகிறது. மேலும், இப்பகுதியில் புள்ளிமான்கள், காட்டுப்பன்றி, உடும்பு உள்ளிட்ட பல விலங்குகள் கணக்கெடுக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே, அரசு முறையாக ஆய்வுசெய்து எங்கள் பகுதியில் உள்ள விலங்குகளையும் விவசாயத்தையும் ஆவன செய்து பாதுகாக்கும் முயற்சி எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!