Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீர்நிலைகளை மாசுபடுத்தும் 29 டன் குப்பைகள் அகற்றம்!

வ்வோர் ஆண்டும் செப்டம்பர் 16-ம் தேதி சர்வதேச கடற்கரைத் தூய்மை தினமாகக் கொண்டாடப்படுகிறது. கடற்கரைகளில் வந்துகுவியும் குப்பைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதும்தான் இந்த தினத்தின் முக்கிய நோக்கம். இதையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து இதுகுறித்து விழிப்புஉணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும், குப்பைகளை அகற்றும் பணிகளிலும் ஈடுபடுவர். இந்த ஆண்டும் பல்வேறு இடங்களில் இந்தத் தூய்மைப்பணிகள் நடைபெற்றன. சென்னை எலியட்ஸ் கடற்கரையில் Indian Maritime Foundation மற்றும் Ocean Conservancy ஆகிய இரு அமைப்புகள் இணைந்து கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டன. இந்தப் பணிக்கு விகடனும் தனது ஊடக ஆதரவை அளித்திருந்தது. இந்த அமைப்புகளின் சார்பில் தமிழகம், கேரளா, கோவா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நீர்நிலைகள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகள் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றன. 

சர்வதேச கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சி

மொத்தம் 43 இடங்களில் நடைபெற்ற இந்தத் தூய்மைப் பணியில் 29 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிளாஸ்டிக் குப்பைகள் மட்டுமே 47 % . இந்த ஆண்டு மொத்தம் 278 கி.மீ தூரத்திற்கு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் தொடக்கவிழா கடந்த சனிக்கிழமை காலை எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்றது. இதில் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., நடராஜன் டி.ஜி.பி, நடிகை சுஹாசினி மணிரத்னம், கேப்டன் கிருஷ்ணமூர்த்தி, இந்தியக் கடற்படையின் ஓய்வு பெற்ற அட்மிரல் சீனிவாசன், ராஜன் வீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குப்பைகளை அகற்றும் தன்னார்வலர்கள்

முதலில் பேசிய கேப்டன் கிருஷ்ணமூர்த்தி, "நம்முடைய நீர்நிலைகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகக் குப்பைகள் இருந்து வருகின்றன. வருடந்தோறும் பல டன் அளவுள்ள குப்பைகள் கடலில் கலப்பதால், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, கடலின் சூழலும் கெடுகிறது. பிளாஸ்டிக் குப்பைகளால் மட்டுமே சுமார் 1,00,000 லட்சம் கடல்பறவைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன" என்றார்.

அடுத்து பேசிய ராஜன் வீர், "நிலப்பரப்பில் எப்படி அரிய வகை விலங்குகள் ஆபத்தில் இருக்கின்றனவோ அதைப்போலவே கடல் வாழ் உயிரினங்களும் ஆபத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. திமிங்கிலங்கள், டால்பின்கள் போன்றவை கடல் மாசுபாட்டினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன" என்றார்.

குப்பைகளை அகற்றும் தன்னார்வலர்கள்

அதைத்தொடர்ந்து தமிழக காவல்துறையின் முன்னாள் டி,ஜி.பி.,யும், தற்போதைய மயிலாப்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான நடராஜன் பேசும் போது, "சென்னையில் ஒவ்வொரு நாளும் சுமார் 3000 மெட்ரிக் டன் என்ற அளவிற்கு குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. என்னுடைய மயிலாப்பூர் தொகுதியிலேயே இந்தக் குப்பைகள் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. மக்கள் குப்பைத்தொட்டிகளில் குப்பைகளைப் போடுவதில்லை. இதனால்தான் குப்பைகளைக் கையாள்வதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்தப் பணியை இத்துடன் நிறுத்தாமல், தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement