Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி: குடகு விரைந்தது மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ்!

பணமோசடி புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவதற்காக மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் குடகில் தங்கியுள்ள ரிசார்ட்டுக்கு விரைந்துள்ளனர்.

செந்தில் பாலாஜி


தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வான செந்தில் பாலாஜி கடந்த 2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4.25 கோடிரூபாய் லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. அதேபோல, செந்தில் பாலாஜி ரூ.1.17 கோடி மோசடி செய்ததாக, போக்குவரத்துத் துறை உதவி மேலாளரும் புகார் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் கர்நாடக மாநிலம் குடகுக்கு விரைந்துள்ளனர். அப்போது, செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜி உள்ளிட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஏற்கெனவே தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தத் தகவல் தினகரன் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement