Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வறட்சி நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் அவதி!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சூராணம் கிராம விவசாயிகள் வறட்சி நிவாரணம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அக்கிராம மக்களிடம் பேசும் போது, ’சூராணம் கிராமத்தில் 600 விவசாயிகள் வறட்சி நிவாரணத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், 120விவசாயிகளுக்கு விஏஓ அலுவலகத்திலிருந்து பட்டியல் அனுப்பப்பட்டும் எங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கடந்த ஐந்து மாத காலமாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துவருகிறோம். அதிகாரிகளோ நிவாரணம் வரும் போங்க. வரும் போங்கனு சொல்லுறாங்க. எப்பதான் வரும்னு தெரியல. இப்ப நாங்க ஆறாவது தடவையாக இந்தப் புகார் மனு கொடுக்க வந்திருக்கிறோம். தாசில்தாரிடம் மனுகொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சட்டசபையில் முதல்வர் வறட்சி நிவாரணம் அதிகபட்சமாக இருபத்தேழாயிரம் ரூபாய் என அறிவித்தார். ஐந்து ஏக்கர் வரை விவசாயம் செய்தவர்களுக்கு மட்டும் வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்றார்கள். எத்தனை ஏக்கர் வைத்திருந்தாலும் ஐந்து ஏக்கருக்கு மட்டுமே வறட்சி நிவாரணம் வழங்கப்படும். ஆனால் நாங்கள் ஒரு ஏக்கர் ரெண்டு ஏக்கர் நிலம் வைத்திருக்கிறோம். எங்களுக்கு மட்டும் எப்படி வறட்சி நிவாரணம் பட்டியலில் விடுபட்டுப் போனது என்று தெரியவில்லை. எங்களுக்கு நிவாரணம் இல்லையென்றால் தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம். இதிலும் நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருக்கிறோம்’ என்கிறார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement