Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்: எடியூரப்பா வழக்கு தீர்ப்பு என்ன?

அ.தி.மு.க-விலிருந்து தனியாகப் பிரிந்து செயல்பட்டு வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அரசியல் அசாதாரணச் சூழல் நிலவுகிறது. ஆனால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தால், தினகரன் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. 

எடியூரப்பா வழக்கு

 உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லாம். 2010-ம் ஆண்டு கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது, 16 எம்.எல்.ஏ-க்களின் பதவியை சாபாநாயகர் பறித்தார். இதில், 11 பேர் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ-க்கள். மீதி ஐந்து பேர் சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள். இவர்கள் 16 பேரும் எடியூரப்பாவுக்கு ஆதரவளித்து வந்தனர். தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கிய நிலையில்தான் சபாநாயகரால் இவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். 

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, தகுதிநீக்கம் சரியானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்தனர். 2011-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கூறியிருப்பதாவது, ''நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வரின் வெற்றி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், நீதியைக் கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் எடுத்த முடிவை இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. முதல்வருக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டுள்ளார் என்பதைத் தவிர, வேறு எந்த தர்க்கபூர்வமான காரணங்களும் தகுதி நீக்கத்துக்கு இல்லை. எனவே எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க உத்தரவை ரத்து செய்கிறோம்'' என்று தீர்ப்பளித்தது. 

எனவே, தினகரன் தரப்பு நீதிமன்றத்தை அணுகியிருப்பதால், அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement